யாழ் மண்டைதீவில் பல துப்பாக்கி ரவைகள் மீட்பு
Sri Lankan Tamils
Tamils
Jaffna
By Shalini Balachandran
யாழ் (Jaffna) மண்டைதீவில் T56 ரக துப்பாக்கி பல ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி ரவைகள் இன்று (20) கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், “ஊர் காவல்துறை காவல் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவுப் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
துப்பாக்கி ரவைகள்
இதன்போது, T56 ரக துப்பாக்கி ரவைகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, இது தொடர்பான தகவல்கள் ஊர்காவற்றுறை காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்தநிலையில், நாளை (21) ஊர்காவற்றுறை காவல்துறையினர் ரவைகளை மீட்டெடுப்பதற்கான மனுவை நீதிமன்றில் வழங்கவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர் காவற்றுறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
