யாழ்.மாவட்ட உதவி கல்வித்துறை பிரதிக்கல்விப்பணிப்பாளரின் திறமைக்கு கிடைத்த பரிசு
வடமாகாண கல்வித் திணைக்கள உடற்கல்வித் துறை பிரதிக் கல்விப் பணிப்பாளர் இ.ராஜசீலன் சீனாவில் நடைபெறவுள்ள 16 வயதிற்குட்பட்ட சர்வதேச உதைபந்தாட்ட போட்டிக்கான இலங்கை அணியின் தலைமை அதிகாரியாக கல்வி மற்றும் விளையாட்டு அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டு பயணமாகிறார்
இவர் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன் கல்வி,விளையாட்டு துறையில் உடற்கல்வி ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக, அதிபராக, உதவி,பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றுவதுடன் கிரிக்கெட், உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், எல்லே விளையாட்டுக்களில் சிறந்த வீரராக திகழ்ந்ததுடன், மெய்வல்லுநர் விளையாட்டுக்களில் முப்பாய்ச்சல் நீளம் பாய்தல் போட்டிகளில் நீண்ட காலமாக சாதனையாளராக திகழ்ந்தவர்.
சிநேகபூர்வமான அணுகுமுறை
விளையாட்டு நிகழ்வுகளை சிறப்பாக ஒழுங்கமைத்து நடத்துவதில் திறமையானவராகவும் சிநேகபூர்வமான அணுகுமுறையாக வடமாகாண விளையாட்டு துறையை வளர்த்தெடுப்பதில் முக்கிய, பங்காற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
