செவ்வந்தியுடன் கைதான “கம்பஹா பபா“வுக்கு சொந்தமான தோட்டாக்கள் மீட்பு!
நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இஷாரா செவ்வந்தியுடன் இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான 'கம்பாஹா பபா' என்ற சந்தேகநபர் வழங்கிய தகவல்களின்படி, 50 T-56 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
அதன்படி, கந்தான-கெரவலப்பிட்டி அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் உள்ள ஒரு தூணுக்கு அருகில் சுமார் 50 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
குறித்த வெடிபொருட்கள் கெஹெல்பத்தர பத்மே மூலம் தனக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
நீதிமன்றி்ல் முன்னிலை
களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் கம்பஹா பாபா நேற்று (18.10.2025) பேலியகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
கண்டுபிடிக்கப்பட்ட வெடிமருந்துகள் வெலிசரை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
