இலவசமாக வழங்கப்படவுள்ள உர கையிருப்பு: அதிருப்தி அளிக்கும் அதிகாரிகளின் செயல்
உலக உணவு மற்றும் விவசாய அமைப்பினால் இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட பூந்தி உரத்தை (MOP) கொண்டுவருவதற்கு ஆறு மாத காலம் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சு, நிதியமைச்சு உள்ளிட்ட பல நிறுவனங்களின் அதிகாரிகளின் திறமையின்மையால் இவ்வாறு கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விவசாய அமைச்சில் நேற்றையதினம் (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்களுக்கு சிக்கல்
உலக உணவு மற்றும் விவசாய அமைச்சு இலங்கைக்கு 55,000 மெட்ரிக் தொன் பூந்தி உரத்தை வழங்கவுள்ளதாகவும், சட்டமா அதிபர் திணைக்களமும் வெளிவிவகார அமைச்சும் மாத்திரமே இது தொடர்பான பணிகளை துரிதமாக மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கப்பலில் ஏற்றப்பட்ட உர கையிருப்பை கொண்டுவருவதற்கே இவ்வாறு கால தாமதம் ஆகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், சில அமைச்சுக்களின் அதிகாரிகளின் காலதாமதம் காரணமாக அமைச்சர்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இவ்வாறிருக்க அமைச்சர்களாலும் ஜனாதிபதியாலும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |