உலகின் மிக உயரமான சாகச விளையாட்டுத் தலமாக கொழும்பு தாமரை கோபுரம்!
கொழும்பு தாமரை கோபுரத்தில் இந்த ஆண்டு டிசெம்பர் மாதத்திற்குள் பங்கி ஜம்பிங் சாகச விளையாட்டுத் திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அதன் முகாமைத்துவ தலைவர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு லோட்டஸ் டவர் மற்றும் சிங்கப்பூர் கோ பங்கி நிறுவனம் சிறிலங்காவில் முதல் தடவையாக பங்கீ ஜம்பிங்கை தொடங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த திட்டமானது நடைமுறைக்கு வந்து பங்கி ஜம்பிங் ஆரம்பிக்கப் பட்ட பின்னர் உலகின் மிக உயரமான பங்கீ ஜம்ப் தலமாக இது அமையும் என குறிப்பிடப்படுகிறது.
ஓகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்டிருந்தது
இந்த திட்டமானது ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் அதில் சில மேம்படுத்தல்கள் செய்யப்பட வேண்டும் என நிர்வாகம் கண்டறிந்ததால் நிறுவனம் தனது திட்டங்களை மாற்றியது.
இதன் காரணமாகவே டிசம்பர் மாதம் பங்கி ஜம்பிங் தொடங்க உள்ளதாக நிர்வாகம் கூறுகின்றது.
சிறிலங்காவின் சுற்றுலாத் துறையை சர்வதேச அளவில் மேம்படுத்துவதற்காக தாமரை கோபுரத்தில் இருந்து முதல் ஸ்கை டைவிங் நிகழ்வு (ஒரு கண்காட்சி ஜம்ப்) அண்மையில் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.