15 பில்லியன் பெறுமதியான 200 மில்லியன் சிகரெட்டுகள் அழிப்பு
Ranjith Siyambalapitiya
Government Of Sri Lanka
By Pakirathan
கெரவலப்பிட்டியவில் 15 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதி கொண்ட 200 மில்லியன் சிகரெட்டுகள் அழிக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு 13 பில்லியன் ரூபா நட்டம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு சுங்கத் திணைக்களத்தினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அழிப்பு
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
"இவற்றை யாரும் விற்க முடியாதா? என கேள்வி எழுப்பலாம். உண்மையில் இவற்றை விற்க முடியாது. ஏனெனில் இவற்றின் தரத்திற்கு எந்தப் பொறுப்பும் கூறமுடியாது. சிகரெட்கள் முற்றிலும் நிறம் மாறிவிட்டன.
இதன் காரணமாக குறித்த சிகரெட் தொகையினை முழுமையாக அழிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்." என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்