அதிபர் ரணிலின் வீடு எரிப்பு - ஹக்கீமிடம் துருவித்துருவி விசாரணை
ரவூப் ஹக்கீமிடம் 07 மணிநேரம் விசாரணை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று சுமார் 07 மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.
கொள்ளுப்பிட்டி ஐந்தாம் வீதியில் அமைந்துள்ள அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே இது இடம்பெற்றுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி வெளியிட்ட தகவல்
ரவூப் ஹக்கீம் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த விசாரணைகள் இடம்பெற்றதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக வாக்கு மூலம் ஒன்றை வழங்குமாறு கோரி குற்றவியல் விசாரணை திணைக்களம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரி துலாஞ்சலி பிரேமதாசவுக்கு அழைப்பாணை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
