தப்பியோடிய சிரிய ஜனாதிபதி : தந்தையின் சவப்பெட்டியை தோண்டியெடுத்து தீவைத்த கிளர்ச்சியாளர்கள்
சிரிய(syria) ஜனாதிபதி பசார் அல் ஆசாத் ரஷ்யாவிற்கு(russia) தப்பிச் சென்ற நிலையில் அவரது தந்தை அடக்கம் செய்யப்பட்ட கல்லறை கிளர்ச்சியாளர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
அசாத்தின் தந்தையும் சிரியாவின் முன்னோடியுமான ஹபீஸ் அஸ் ஆசாத் (Hafez al-Assad) 2000 ஆம் ஆண்டில் இறந்தார்.இதனையடுத்து குடும்பத்தின் மூதாதையர் கிராமமான கர்தாஹாவில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
சவப்பெட்டியை தோண்டியெடுத்து தீவைப்பு
இந்தக்கல்றையில் அடக்கம் செய்யப்பட்ட ஆசாத்தின் தந்தையின் சவப்பெட்டியை(coffin) தோண்டியெடுத்த கிளர்ச்சியாளர்கள் அதற்கு தீவைத்துள்ளனர்.
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட போர் கண்காணிப்பாளரின் , மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு (SOHR) அமைப்பின் கூற்றுப்படி கிளர்ச்சியாளர்கள் அசாத்தின் அலாவைட் சமூகத்தின் லதாகியா மையப்பகுதியில் அமைந்துள்ள கல்லறைக்கு தீ வைத்தனர்.
கல்லறையின் மீது நின்று புகைப்படம்
சமாதியின் சில பகுதிகள் எரிந்து சேதமடைந்ததையும் வெளியான காட்சிகள் காட்டுகின்றன.
ஆயுதமேந்திய கிளர்ச்சிப் போராளிகள் குடும்பத்தின் எரிக்கப்பட்ட ஹபீஸ் அல்-அசாத்தின் கல்லறையின் மீது நின்று புகைப்படம் எடுப்பதையும் வெளியான புகைப்படங்களில் காணமுடிகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |