புரூண்டி சிறையில் பற்றிய தீ - 38 கைதிகள் பரிதாபகரமாக பலி (படம்)
ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான புருண்டியில் உள்ள மத்திய சிறையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 38 கைதிகள் பரிதாபகரமாக கருகி மாண்டனர்.
அத்துடன் 69 கைதிகள் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
தலைநகர் கிட்டேகா-வில் உள்ள சிறையில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 26 கைதிகள் உடல் கருகி இறந்ததாகவும்,12 கைதிகள் தீயினால் எழுந்த புகை மூட்டத்தால் மூச்சு திணறி இறந்ததாகவும் அந்நாட்டின் துணை அதிபர் பிராஸ்பர் பஜோம்பான்ஜா தெரிவித்தார்.
இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
Incendie dû à un court-circuit maîtrisé par @Burundi_Police à la prison centrale de @Gitega : 38 prisonniers morts et 69 autres blessés. Le Vice-président de la République + les ministres du @MininterInfosBi, @MiniJustice_BDI, @minisante et @GenreMinistere au chevet des victimes pic.twitter.com/h1wJtzijjQ
— MininterInfosBi (@MininterInfosBi) December 7, 2021