விபத்துக்குள்ளான அரச பேருந்து: இருவர் வைத்தியசாலையில்..
மீன் ஏற்றிச் செல்லும் வண்டியொன்றும் அரச பேருந்து நேருக்கு நேர் மோதியதில் பாரிய விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்து இன்று (13)அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி வழியே அக்கரைப்பற்று பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த அரச பேருந்தும் மட்டக்களப்பு கல்முனை வீதி வழியாக வந்த சிறிய ரக மீன் ஏற்றிச் செல்லும் வண்டி ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதிகள் காயம்
இதன் போது இவ்விரு வாகனத்தினையும் செலுத்தி சென்ற சாரதிகள் காயமடைந்த நிலையில் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் விபத்து இடம்பெற்ற வேளை மழை அப்பகுதியில் பெய்து கொண்டிருந்ததாகவும் வளைந்து செல்லும் பிரதான வீதியில் சிறிய ரக மீன் ஏற்றிச் செல்லும் வண்டி வேகக் கட்டுப்பாட்டை மீறி பயணித்த வேளை இவ்விபத்து இடம்பெற்றதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 10 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்