சிவனொளிபாதமலையில் கோர விபத்து - இரண்டு பெண்கள் பலி
சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தில் பாய்ந்துவிபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நோட்டன்-தியகல வீதியில் சிவனொளிபாதமலை யாத்திரிகர்களை ஏற்றிச்சென்ற பேருந்தே இவ்வாறு பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
26 பேர் காயம்

இரண்டு பெண்கள் உயிரிழந்ததோடு மேலும் 26 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இரத்மலானை பகுதியிலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகர்களை ஏற்றிச்சென்றிருந்த நிலையில், மீண்டும் இரத்மலானை நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து ஏற்பட்ட போது பேருந்தில் சுமார் 60 பேர் பயணித்துள்ளதாகவும், இவர்களில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோட்டன் பிரிட்ஜ் காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.