அரச பேருந்து சாரதியின் பொறுப்பற்ற செயல்! மயிரிழையில் உயிர் தப்பிய பெண்
கிளிநொச்சியில் அரச பேருந்து சாரதியின் பொறுப்பற்ற செயல் காரணமாக பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சியில் இருந்து இ.போ.ச பேருந்தில் பயணித்த பெண்ணொருவர் கரடிபோக்கு சந்தியிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில், பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட சமயம், குறித்த பெண் இறங்குவதை அவதானிக்காத பேருந்தின் சாரதி, பயணிகளை ஏற்றிய பின்னர் பேருந்தை செலுத்தியுள்ளார்.
பயணிகள் விசனம்
இதன்போது பேருந்திலிருந்து விழுந்த குறித்த பெண் காயங்களிற்குள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இவ்வாறாக பேருந்து சாரதிகளின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பலரும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவற்றிற்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |