ஜனவரி முதல் அதிகரிக்கப்போகும் பேருந்துக் கட்டணம்
ஜனவரி முதல் நாட்டில் பெறுமதி சேர் வரியை 18 வீதமாக அதிகரிப்பதன் காரணமாக அனைத்து பேருந்து கட்டணங்களும் 15% அதிகரிக்கும் என போக்குவரத்து அமைச்சு வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தற்போது 30 ரூபாவாக உள்ள குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 35 ரூபாவாக இருக்கும் எனவும், ஏனைய அனைத்து கட்டணங்களும் அதே சதவீதத்தினால் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பேருந்து சங்கங்கள் கோரிக்கை
எரிபொருள் விலை மாத்திரமன்றி ஏனைய 11 நிபந்தனைகளையும் கருத்தில் கொண்டு கட்டணத்தை திருத்தியமைக்குமாறு பேருந்து சங்கங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
பேருந்துகளுக்குத் தேவையான டயர்கள், பெட்டரிகள், லூப்ரிகண்டுகள், டியூப்கள் மற்றும் பிற உபகரணங்களின் விலை, பேருந்து உரிமையாளர்கள் செலுத்தும் வருடாந்த உரிமக் கட்டணம், ஊழியர்களின் சம்பளச் செலவுகள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு பேருந்துக் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |