பேருந்து கட்டணம் மீண்டும் உயர்வடைய வாய்ப்பு!
transport
busfare
By Kanna
நாட்டில் அடுத்த மூன்று மாத காலங்களுள் பேருந்து கட்டணங்கள் உயர்வடைய வாய்ப்புகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 25 வீதத்தால் பேருந்து கட்டணம் உயரும் எனவும், ஆரம்பக் கட்டணமாக 25 அல்லது 30 ரூபா நிர்ணயிக்கப்படும் எனவும் தெரியவருகின்றது.
இவ் பேருந்து கட்டண உயர்வு வருடாந்த பேருந்து கட்டண மீளாய்வின் அடிப்படையிலேயே இடம்பெறவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
எவ்வாறாயினும், நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையால் சிலநாட்களுக்கு முன்னரே பேருந்து கட்டணங்கள் 15 விதத்தினால் உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி