பேருந்து கட்டணங்களின் விலையில் மாற்றம் - வெளியான புதிய தகவல்
புதிய இணைப்பு
நேற்று நள்ளிரவு முதல் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பேருந்து கட்டணம் 4% அதிகரிக்கப்படவுள்ளது.
குறித்த அதிகரிப்பானது நாளை சனிக்கிழமை முதல் (02.09.2023) நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
எரிபொருட்களின் விலை அதிகரித்த நிலையில், பேருந்து கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டீசல் விலை உயர்வின் தாக்கம் 4 சதவீதத்திற்கு மேல் இருந்தால், பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்றும், கட்டணம் அதிகரிக்கப்படுமா இல்லையா என்பது குறித்த அறிவிப்பு இன்று பிற்பகல் வெளியிடப்படும் என்றும் அதே அதிகாரி மேலும் தெரிவித்தார்.
டீசல் விலை

இந்த நிலையில், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 341 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.