நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 14 பேர் உயிரிழப்பு
India
Nepal
World
By Raghav
நேபாளத்தில் - (Nepal) இந்திய (India) சுற்றுலாப்பயணிகள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேபாளத்தின் தனஹுன் மாவட்டத்தில், இன்று (23) மர்சையங்டி ஆற்றின் ஓரமாகச் சென்று கொண்டிருந்த போதே குறித்த பேருந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம்
இவ்விபத்து நடந்த போது பேருந்தில் 40 பேர் பேருந்தில் பயணித்ததாகவும் அதில் 14 பேர் உயிரிழந்ததுடன் ஏனையவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலநிலை மாற்றம், இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட இதுபோன்ற விபத்துகளினால் கடந்த ஜூலை மாதம் வரை 62 பேர் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்