மத்திய புளோரிடாவில் பேருந்து விபத்து: எட்டு விவசாயத் தொழிலாளர்கள் பலி பலர் படுகாயம்
அமெரிக்காவின் (America) மத்திய புளோரிடாவில் விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் எட்டு பேர் உயிரிழந்ததுடன் சுமார் 40 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், தர்பூசணிகளை அறுவடை செய்து வரும் டுனெல்லனில் உள்ள கேனான் பண்ணைகளுக்கு தொழிலாளர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
இறந்த தொழிலாளர்கள்
53 விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற இந்த பேருந்தானது ஆர்லாண்டோவின் (Orlando) வடக்கே உள்ள மரியன் மாகாணத்தில் ஒரு கனரக வாகனம் மீது மோதியதாக புளோரிடா (Florida) நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு தெரிவித்துள்ளது.
விபத்தின்போது, சாலையைவிட்டு விலகிச் சென்ற பேருந்து தடுப்பை உடைத்து பக்கத்தில் ஒரு வயலில் கவிழ்ந்துள்ளது.
மேலும், இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து பண்ணை மூடப்படுவதாக கேனான் பண்ணை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |