சிறந்த சுற்றுச்சூழல் நட்பு கிராமத்திற்கான விருதினை தன்வசப்படுத்தியது றீச்சா
றீச்சா (reecha) ஓர்கானிக் ஃபார்ம் (தனியார்) நிறுவனம் BUSINEN WORLD INTERNATIONAL AWARDS- 2025 இன் சிறந்த சுற்றுச்சூழல் நட்பு கிராமத்திற்கான விருதினை பெற்றுள்ளது.
குறித்த விருதானது கடந்த ஏப்ரல் 05ஆம் திகதி "வணிக உலக சர்வதேச விருதுகள் விழாவில்" வைத்து வழங்கப்பட்டது.
வடக்கு மாகாணத்தில் (northern province) மிகவும் குறுகிய காலத்தில் பெரு வளர்ச்சியை கண்டு உலகத்தமிழர்களின் பேராதரவை பெற்றுவரும் ஒரு பண்ணையாகும்.
றீச்சா
கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் மிகப்பெரிய நிலப்பரப்பில் மிகவும் குறுகிய காலத்தில் பெரு வளர்ச்சியை கண்ட றீச்சா நிறுவனம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலித்து மகிழும் ஒரு இடம் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.
சுற்றுலா தலம் மட்டுமல்லாது விவசாயம், கால்நடை வளர்ப்பு என இன்னோரன்ன பல்வேறு செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றது.
அத்துடன் இந்த நிறுவனம் பல நூறுபேருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கி அவர்களின் குடும்பத்தின் பொருளாதாரத்தையும் கட்டி எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
