ஐந்து வயது சிறுமி பாலியல் பலாத்காரம்! 65 வயதுடைய நபர் அதிரடி கைது
மாதம்பே பகுதியில் ஐந்து வயது மழலையர் பள்ளி மாணவியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் 65 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாதம்பே , கருக்குவட்டாவா பகுதியைச் சேர்ந்த இந்தச் சந்தேக நபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணைகளின்படி, பாதிக்கப்பட்ட சிறுமி பிஸ்கட் வாங்குவதற்காகச் சந்தேக நபருக்குச் சொந்தமான சில்லறை விற்பனைக் கடைக்குச் சென்றபோதே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வைத்தியசாலையில் சிறுமி
சந்தேக நபர் அச்சிறுமியை ஆசைவார்த்தைகள் கூறி கடையின் உட்பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கு இந்த துஷ்பிரயோகத்தை நிகழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, விரிவான வைத்திய பரிசோதனைக்காக நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மாதம்பே காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சுரேஷ் சலேவின் கைதுக்குப் பின்னால் உடையும் இரகசியங்கள்: கே.பி. உடனான சந்திப்புகளும் மூடிமறைக்கப்பட்ட புலிகளின் சொத்துக் குவிப்புகளும்!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! . |