பணமோசடிக்கு உதவிய தொழிலதிபர் அதிரடி கைது!
பணமோசடிக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகள் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 (1) (b) இன் கீழ் பணமோசடி குற்றத்திற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நீதிமன்றின் உத்தரவு
புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து பெறப்பட்ட 30 மில்லியன் ரூபா நிதியை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கையாண்டு, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு மாற்றுவதன் மூலம் சந்தேகநபர் தெரிந்தே மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபரான ஜி.எம். நிஹால் சிசிர குமார என்பவர், கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |