பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி
Sri Lanka Upcountry People
Anura Kumara Dissanayaka
Sri Lankan Peoples
NPP Government
Budget 2026
By Dilakshan
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்வு நாளை (30) நடைபெறும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, பிரதேச பெருந்தோட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் சம்பள அதிகரிப்பு
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கும் போது, பெருந்தோட்ட தொழிலாளர் சமூகத்தின் சம்பளத்தை ரூ. 1,750 ஆக உயர்த்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.

அப்போது, அடிப்படை சம்பளம் ரூ. 1,350 இலிருந்து ரூ. 1,550 ஆக உயர்த்தப்படும் என்றும், அரசாங்கம் வேலைநாட்களின் அடிப்படையில் ரூ. 200 செலுத்தும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, வரவு செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்புக்காக ரூ. 5,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 10 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி