கொழும்பில் ஈரான் தூதுவர் மீது தாக்குதல்
கொழும்பில் ஈரான் தூதுவர் மீது தாக்குதல் நடத்திய வர்த்தகரை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ்(Dr. Alireza Delkhosh )மீது கொழும்பு சிட்டி சென்டரில் அமைந்துள்ள (சிசிசி) வாகன தரிப்பிடத்தில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு 7ஐச் சேர்ந்த வர்த்தகருக்கே மீண்டும் விள்ளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
வாகன தரிப்பிடத்தில் ஏற்பட்ட தர்க்கம்
கொழும்பு 07, வார்ட் பிளேஸில் வசிக்கும் சந்தேகநபரான புவனேக மஹசென் பஸ்நாயக்க(Buwaneka Mahasen Basnayake) என்ற வர்த்தகர், சி.சி.சி கார் தரிப்பிடத்தில் தனது வாகனத்தை நிறுத்த முற்பட்ட தூதருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, தூதுவரைத் தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றின் உத்தரவு
சந்தேகநபர் கோட்டை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதன் பின்னர் புதன்கிழமை (22) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
