தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு லண்டன் தொடக்கம் ஜெனிவா வரை மிதிவண்டி பயணம்
By Independent Writer
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு லண்டன் தொடக்கம் ஜெனிவா வரையிலான மிதிவண்டி பயணம் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் மிச்சம் மற்றும் ஹேஸ் பகுதியில் இருந்து ஆரம்பமாகியுள்ளது .
கடந்த இரண்டு வருடங்களாக இந்த பயணத்தில் பங்குகொண்டு சுகயீனம் காரணமாக கடந்த வருடம் சாவைத்தழுவிக்கொண்ட திருமதி விஜயவாணி அரவிந்தன் அவர்களுக்கான நினைவு வணக்கங்களோடும் , அகவணக்கத்தோடு மிதிவண்டி பயணம் ஆரம்பமாகியுள்ளது.
தொடர்ந்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து மனு கையளிக்கப்பட்டு மதியம் 3 மணியளவில் பிரித்தானிய பிரதமர் இல்லத்தில் மனு கையளிக்கப்பட்டது.










