காவல்துறைமா அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்!
Sri Lanka Police
By Beulah
தான் இன்று (25) முதல் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான்காவது முறையாக அவருக்கு வழங்கப்பட்ட சேவை நீட்டிப்பு நிறைவடைந்ததை கவனத்தில் கொண்டு அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பதவி வெற்றிடம்
நான்காவது பணி நீட்டிப்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் காவல்துறைமா அதிபர் பதவி வெற்றிடமாக உள்ளது.
வெற்றிடமாகவுள்ள காவல்துறைமா அதிபர் பதவிக்கு அடுத்த சில நாட்களில் புதிய காவல்துறைமா அதிபர் நியமிக்கப்படவுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்