வடக்கில் சிங்கள மேலாதிக்கத்திற்கு மீண்டும் இடம்கொடுக்க கூடாது: சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்து

Jaffna Sri Lanka Politician Northern Province of Sri Lanka Local government Election ITAK
By Harrish Apr 21, 2025 08:52 AM GMT
Report

வடக்கில் காலூன்ற நினைக்கும் தேசிய மக்கள் சக்தியின் சிங்கள மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும் அரசியல் ரீதியில் இடம்கொடுக்க கூடாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் (C. V. K. Sivagnanam) வலியுறுத்தியுள்ளார்.

யாழ். (Jaffna) ஊடக அமையத்தில் இன்று (21.04.2025) நடைபெற்ற  ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது, “உள்ளூராட்சி மன்ற தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் 6 ஆம் திகதி தேர்தலும் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.

சஹ்ரான் தங்கியிருந்த ஹோட்டல் அறை..! விலகாத மர்மம்: கேள்வி எழுப்பும் எம்பி

சஹ்ரான் தங்கியிருந்த ஹோட்டல் அறை..! விலகாத மர்மம்: கேள்வி எழுப்பும் எம்பி

உள்ளூராட்சி தேர்தல் 

அதேநேரம் உள்ளூராட்சி என்பது உள்ளூருக்கான அதிகாரங்களை கொண்டது. அது அபிவிருத்தியையும் வலுவான சமூகக் கட்டமைப்பின் பின்னணியையும் கொண்டது.


ஒவ்வொரு உள்ளூராட்சியும் அந்தந்த பிரதேசங்களைக் கொண்ட பிரதிநிதிகளை குதிப்பாக தமிழர் பூர்வீக கட்சிகளை கொண்ட பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது அவசியம்.

இந்நேரம் தமிழரசுக் கட்சி இம்முறை வடக்கு  - கிழக்கில் 58 சபைகளைல் போட்டியிடுகின்றது. இந்த சபைகளுக்கு நாம் சிறப்பான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம்.

ஜனாதிபதியின் கூற்று 

இந்நிலையில், ஊழல் இல்லாத சபைகளுக்கே நிதி என ஜனாதிபதி கூறுவதை ஏற்க முடியாது.

கடந்த காலத்தில் வடக்கு மாகாண சபைக்கு அனுப்பப்பட நிதியில் எந்த நிதி திருப்பி அனுப்பப்படது என்பதை எவரவது நிரூபியுங்கள். இதை நான். திருப்பி அனுப்பப்பட்டது என கூறும் தரப்பினருக்கு சாவாலாகவும் விடுகின்றேன்.

வடக்கில் சிங்கள மேலாதிக்கத்திற்கு மீண்டும் இடம்கொடுக்க கூடாது: சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்து | C V K Sivagnanam Press Speech In Jaffna

தேசிய மக்கள் சக்தியும் இம்முறை வடக்கில் உள்ள அனைத்து சபைகளிலும் போடியிடுகின்றது.

ஆனால் எவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக, சுதந்திரமாக செயற்பட முடியாதிருக்கின்றார்களோ அதே போன்றவர்களாகவே இவர்களும் தென்னிலங்கையில் நிகழ்ச்சி நிரலை நிறைவுசெய்யும் ஏவுகருவிகளாகவே இருப்பர்.

சுமந்திரனின் பதவி முத்திரை தொடர்பில் வெடித்த சர்ச்சை

சுமந்திரனின் பதவி முத்திரை தொடர்பில் வெடித்த சர்ச்சை

வடக்கு பிரதேசம்

குறிப்பாக சுயாதீனமாக செயற்பட குறித்த ஜே.வி.பி கட்சியின் கொள்கை நிலைப்பாடும் இடங்கொடுக்காது.

அத்துடன் கடந்த தேர்தல்களில் சொன்னது எதனையும் இதுவரை செய்யாதவர்கள் இனி செய்வார்களா?

வடக்கில் சிங்கள மேலாதிக்கத்திற்கு மீண்டும் இடம்கொடுக்க கூடாது: சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்து | C V K Sivagnanam Press Speech In Jaffna

அநுர தரப்பு அரச ஆதரவு சக்திகள் சுயேச்சையாகவும் நேரடியாகவும் எமது மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரித்து குறிப்பாக டக்ளஸ் தேவனந்தா மற்றும் அங்கஜனின் வாக்குகளை அபகரித்தே வெற்றி பெற்றுள்ளனர்.

அந்தவகையில் சிங்கள மேலாதிக்கம் இனி வடக்கில் எடுபடக்கூடாது. அதற்கு மக்கள் தெளிவுடன் செயற்படுவது அவசியம்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

தமிழ் அரசியல் கைதிகள்

மேலும் அரசியல் கைதிகள் விடுதலை என கூறுவது ஒவ்வொரு தேர்தல் கால பேசுபொருளே தவிர அது உண்மையான பேச்சுக்கள் அல்ல.

அநுர நினைத்திருந்தால் தண்டனை பெறும் தமிழ் கைதிகளை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவித்திருக்கலாம். அதை ஏன் செய்யவில்லை?

வடக்கில் சிங்கள மேலாதிக்கத்திற்கு மீண்டும் இடம்கொடுக்க கூடாது: சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்து | C V K Sivagnanam Press Speech In Jaffna

அநுர அரசு தாம் ஒரு மாற்றத்துக்கானவர்களாக இருந்தால் இன நல்லிணக்கத்துக்கு எடுத்துக்கட்டாக விடுவிப்பை செய்திருக்கலாம். அதை செய்ய இவர்கள் விரும்பமாட்டார்கள்.இவர்களே இருக்கும் அரசியல் கட்சிகளுக்குள் மிகவும் இனவாதத்துடன் பயணிப்பவர்கள்.

அதேநேரம் ஊழல் மோசடியை இல்லாதொழிப்போம் என்று கூறும் இவர்கள் இன்று ஊழலையும் மோசடியையும் கடத்தல்களையும் செய்கின்றனர்.” என அவர் தெரிவித்துள்ளார்.

நேரம் போதாது...! ட்ரம்பை அநுர உடனடியாக சந்திக்க வேண்டும் - பறந்த கோரிக்கை

நேரம் போதாது...! ட்ரம்பை அநுர உடனடியாக சந்திக்க வேண்டும் - பறந்த கோரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!

நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா

ReeCha
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில், கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024