இலங்கையில் 10 மில்லியன்களால் குறைந்த பொலித்தீன் பாவனை!
இலங்கையில் பொலித்தீன் பயன்பாடு 26 மில்லியனிலிருந்து 16 மில்லியனாகக் குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடளாவிய ரீதியில் நுகர்வோர் விவகார அதிகார சபை முன்னெடுத்த (CAA) தீவிர நடவடிக்கையின் மூலம் பொலித்தீன் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (14) நடைபெற்ற வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மூலம் 2026 ஆம் ஆண்டில் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலின் போதே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டது.
சுட்டிக்காட்டிய ஜனாதிபதி
மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பை மேலும் குறைக்கும் நோக்கில் பொலித்தீனுக்கு மாற்றான பொருட்களை அறிமுகப்படுத்தும் இந்தத் திட்டம் தொடரும் எனவும் அந்த அதிகார சபையின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் உணவுப் பொருட்கள் சார்ந்த தரம் மற்றும் விலைக் கட்டுப்பாடு தொடர்பில் தொடர்ந்தும் மக்களிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதால், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் தீவிர பங்களிப்பின் தேவையையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும் நெடுந்தூரப் பேருந்துகள் தரிக்கும் உணவகங்கள் மற்றும் தனியார் வைத்தியசாலைகளின் உணவகங்கள் தொடர்பில் விசேட பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 23 மணி நேரம் முன்