அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை : வெளியான அறிவிப்பு
இலங்கையில் இந்த வாரத்திற்கான பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் வெளியாகியுள்ளன.
நுகர்வோர் விவகார அதிகார சபை (Consumer Affairs Authority) இன்று (23) இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
இந்த நிலையில் 18 அத்தியாவசியப் பொருட்களுக்கான புதுப்பிக்கப்பட்ட விலைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மரக்கறிகளின் புதிய விலை
அதன்படி கோதுமை மா 170 ரூபா தொடக்கம் 196 ரூபாவாகவும், வெள்ளை சீனி 250 ரூபா முதல் 280 ரூபாவாகவும், பருப்பு 280 ரூபாவிலிருந்து 309 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாகிஸ்தான் உருளைக்கிழங்கு 190 ரூபாவிலிருந்து 218 ரூபா வரையும், இந்திய பெரிய வெங்காயம் 274 ரூபா முதல் 302 ரூபாவாகவும், பாகிஸ்தான் பெரிய வெங்காயம் ரூபா 180 இலிருந்து ரூபா 213 ஆகவும், இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு வெங்காயம் ரூபா 292 முதல் 321 ரூபா வரையும் விற்பனை செய்ய முடியும்.
புதிய விலைகள்
மேலும் தாய்லாந்து நெத்தலிக் கருவாடு 860 ரூபாவிலிருந்து 946 ரூபாவாகவும், மற்றைய நெத்தலிக் கருவாடு 785 ரூபாவிலிருந்து 863 ரூபாவாகவும், செத்தல் மிளகாய் 790 ரூபாவிலிருந்து 830 ரூபாவாகவும், வெள்ளை முட்டை ஒரு 43 ரூபா முதல் 47 ரூபாவாகவும், சிவப்பு முட்டை 45 ரூபாவிலிருந்து 50 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட உள்ளூர் ரின் மீன் 425 கிராம் ரூபா 350 முதல் ரூபா 528 ஆகவும், பதிவு செய்யப்பட்ட சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 425 கிராம் ரின் மீன் ரூபா 365 முதல் ரூபா 511 வரையும், வெள்ளை அரிசி ரூபா 181 முதல் ரூபா 204 வரையும், சிவப்பு அரிசி ரூபா 167 முதல் ரூபா 191 வரையும், வெள்ளை நாட்டு அரிசி ரூபா 193 முதல் ரூபா 218 வரையும், புரொய்லர் கோழி முழு தோலுடன் ரூபா 900 முதல் ரூபா 1000 வரையும் விற்பனை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |