முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியாகிய தகவல்
பண்டிகை காலம் நெருங்குவதால் மக்களின் தேவைக்காக மேலும் 42 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கும் நியாயமான விலையில் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி, முட்டை இறக்குமதிக்கான அமைச்சரவை அங்கீகாரம் இன்று (19) வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பண்டிகை கால தேவை
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை நாட்டில் சந்தையை ஸ்திரப்படுத்துவதற்கு போதுமான அளவு முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது
அதன்படி, புத்தாண்டு பண்டிகை கால தேவைக்காக 42 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது, இதில் ஏற்கனவே 18 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்ய உத்தரவு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
விலைகள் சேகரிக்கப்பட்டுள்ளது
இந்த அளவு முட்டைகளை இறக்குமதி செய்வதற்காக, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையால் பரிந்துரைக்கப்பட்ட இந்திய நிறுவனங்களிடமிருந்து விலைகள் சேகரிக்கப்பட்டுள்ளது.
அவற்றை பரிசீலனை செய்து அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரையின்படி உரிய கொள்முதல் உரிமத்தை வழங்க சிறிலங்கா அதிபரின் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது." என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |