துறைமுக நகரத்தில் இரு புதிய திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
கொழும்பு துறைமுக நகரத்தில் இரண்டு முதலீட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, ஆசிரி போர்ட் சிட்டி மருத்துவமனை (தனியார்) 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்து மருத்துவமனையை மேம்படுத்துவதற்கும், டிக்ரி மென்பொருள் தனியார் நிறுவனம் 100,000 அமெரிக்க டொலர் ஆரம்ப அந்நிய நேரடி முதலீட்டில் தகவல் தொழில்நுட்ப வணிகத்தை தொடங்குவதற்கும் முன்வைத்த இரண்டு முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற ரீதியில் அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த இரண்டு யோசனைகளையும் அமைச்சரவையில் முன்வைத்துள்ளார்.
வர்த்தமானி
இந்நிலையில், இரண்டு திட்டங்களும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வணிகமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர் அவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |