லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய காலியான எரிவாயு சிலிண்டர்கள்!
லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய காலியான எரிவாயு சிலிண்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று (23.12.2025) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வால்வுகள் இல்லாத நான்கு வகையான காலியான LPG சிலிண்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மிகக் குறைந்த ஏலத்தை சமர்ப்பித்த சஹமிட் மெட்டல் ப்ரஷர் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
காலியான சிலிண்டர்கள்
அமைச்சரவை ஒப்புதலின் அடிப்படையில், 23 கிலோகிராமில் 20,000 சிலிண்டர்கள் வாங்கப்படவுள்ளன.

இதேவேளை, 5 கிலோகிராமில்185,000 சிலிண்டர்கள் , 25 கிலோகிராமில் 450,000 சிலிண்டர்கள் மற்றும் 37.5 கிலோகிராமில் 7,000 சிலிண்டர்கள் வாங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |