கோட்டாபய நியமித்த பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கும் அநுர அரசு : குற்றம் சுமத்தும் பட்டதாரிகள்

Batticaloa Gotabaya Rajapaksa NPP Government
By Bavan Dec 23, 2025 12:08 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச 53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கினார் ஆனால் இந்த அரசாங்கம் இந்த பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கின்றது என இலங்கை பட்டதாரிகள் சங்க தலைவர் கணேசன் அநீரன் தெரிவித்தார்

பாடசாலைகளின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருந்து ஆசிரிய பணி புரிந்து வருகின்ற பட்டதாரிகளது நிரந்தர ஆசிரியர் நியமனம் மறுக்கப்பட்டு பாடசாலைகளில் இருந்து ஏனைய திணைக்களங்களுக்கு மாற்றுவதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (23) மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை பட்டதாரிகள் சங்க தலைவர் கணேசன் அநீரன் தலைமையில் பட்டதாரிகள் முறைப்பாடு செய்தனர் இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்

அநீதிகளுக்கு சட்டரீதியாக நடவடிக்கை

கடந்த 6 வருடங்களாக பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைக்கப்பட்டு ஆசிரியர் பணிபுரிந்து வருகின்றோம் அந்த வகையில் கடந்த அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சட்டரீதியாக நடவடிக்கை கடந்த வருடம் மேற்கொண்டிருந்தோம்

கோட்டாபய நியமித்த பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கும் அநுர அரசு : குற்றம் சுமத்தும் பட்டதாரிகள் | Anura Gover Injustice Graduates Appointed By Gota

அந்த வகையில் கடந்த அரசாங்கம் பாடசாலையில் இணைக்கப்பட்டு ஆசிரியர் பணியை ஆற்றிக் கொண்டு வருகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஒரு இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஒரு தீர்வை தர இருந்தபோதும் ஆட்சி மாற்றத்தின் பிற்பாடு தற்போதைய அரசாங்கம் பாடசாலையில் இணைக்கப்பட்டு ஆசிரியர் பணியை ஆற்றிக் கொண்டு வருகின்ற பட்டதாரிகளை நிரந்தர ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க பல விடையங்களை கூறிக் கொண்டிருக்கிறது.

பாடசாலை விடுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பாடசாலை விடுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பொய் உரையை நாடாளுமன்றத்தில் ஆற்றிய பிரதமர்

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பிரதமர், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் அனைத்து வழக்குகளும் நிறைவுற்றுள்ளது. எனவே இவர்களை போட்டிப்பரீட்சை மூலம் உள்வாங்க அனைத்து ஏற்பாடும் இடம்பெற்றுள்ளது என தெரிவித்தார் இருந்தபோதும் மத்திய அரசாங்கம் சார்ந்த வழக்கு மாத்திரம் நிறைவுற்றுள்ளது.

கோட்டாபய நியமித்த பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கும் அநுர அரசு : குற்றம் சுமத்தும் பட்டதாரிகள் | Anura Gover Injustice Graduates Appointed By Gota

 மாகாண சபை சார்ந்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஜனவரி 29ம் திகதி இருக்கிறது ஆனால் பிரதமர் அனைத்து வழக்குகளும் நிறைவுற்றுள்ளதாக பொய் உரையை நாடாளுமன்றத்தில் ஏன் செய்துள்ளார்?

6 வருடங்களாக பாடசாலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருந்தாலும் ஆசிரியர் பணியை ஆற்றி வருகின்ற குறித்த தரப்பினருக்கு 45 வயதாக அதிகரித்துள்ளோம் அதன் ஊடாக போட்டி பரீட்சை ஊடாக ஆசிரியர் நியமனமத்துக்குள் உள்வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றோம் என்பது உண்மையில் ஒரு சரியான தீர்வா? என்பதை தற்போதைய அரசாங்கம் நினைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த விடையம் தொடர்பாக தற்போதைய ஆட்சியாளர் ஒருவரிடம் கூறியபோது கடந்த அரசாங்கம் தந்த நியமனங்களை எவ்வாறு நாங்கள் முடிவுறுத்துவது என கூறினார் அப்படியாக இருந்தால் கடந்த காலத்தில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல்வாதிகள் செய்த அந்த ஊழல்களுக்கு இப்போதைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

 நீதியான விடையத்தை தர ஏன் எத்தனிக்கவில்லை

 இப்படி கடந்த கால ஊழல்களுக்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியுமானால் எங்களையும் கடந்த கால அரசாங்கள் தங்கள் தேவைகளுக்காக அரசியலுக்காக பயன்படுத்தியுள்ளனர் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய 53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஒரு தடவையில் நியமனம் வழங்கினார்

கோட்டாபய நியமித்த பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கும் அநுர அரசு : குற்றம் சுமத்தும் பட்டதாரிகள் | Anura Gover Injustice Graduates Appointed By Gota

பாதிக்கப்பட்ட தரப்பு என்ற ரீதியில் இப்போது உள்ள அரசாங்கம் நீதியான விடையத்தை தர ஏன் எத்தனிக்கவில்லை. அதேவேளை 6 வருடம் பாடசாலைகளில் கடமையாற்றிவருபவர்களை பெப்ரவரியில் வேறு திணைக்களங்களுக்கு மாற்ற திட்டமிடப்பட்டு வருகின்றது அவ்வாறு நடந்தால் இந்த அரசாங்கம் மீண்டும் மீண்டும் தவறு இழைக்கின்றது

6 வருட ஆசிரியர் பணியை வைத்து போட்டி பரீட்சை இல்லாமல் பிரத்தியேக பரீட்சை வைத்து எங்களை ஆசிரியர் பணிக்கு உள்வாங்க வேண்டும் இருந்தபோதும் எங்கள் தொழில் உரிமை. அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளது அதனடிப்படையில் இன்று மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம் என்றார்

மாணவர்களுக்கு வரப்பிரசாதம் : திருத்தங்களுடன் வருகிறது திட்டம்

மாணவர்களுக்கு வரப்பிரசாதம் : திருத்தங்களுடன் வருகிறது திட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சுன்னாகம், மலேசியா, Malaysia, கொழும்பு, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, தெல்லிப்பளை, Toronto, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Walthamstow, United Kingdom

20 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

சுன்னாகம், கிளிநொச்சி

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Scarborough, Canada

22 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஏழாலை தெற்கு

24 Dec, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Kuching, Malaysia, கொழும்பு, சுழிபுரம், London, United Kingdom, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Maur-des-Fossés, France

18 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு 5

23 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் மேற்கு

22 Dec, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Seattle, United States

17 Dec, 2025
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

16 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008