சிறைச்சாலைகளில் இருந்து தப்பிச் சென்ற 709 கைதிகள்! தேசிய கணக்காய்வு அலுவலகம் கேள்வி
2019 - 2025 வரையான காலப்பகுதியில் தண்டனைக் காலம் முடிவடைவதற்குள் சட்டவிரோதமான முறையில் சிறைச்சாலைகளில் இருந்து தப்பிச் சென்ற 709 கைதிகள் இதுவரை மீண்டும் கைது செய்யப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிவித்துள்ளது.
இவ்வாறு தப்பிச் சென்ற கைதிகள் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக நடமாடுவது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையில், சிறைச்சாலைகள் தொடர்பான பல சட்டவிரோத நடவடிக்கைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
ண்டும் கைது செய்யப்படவில்லை
கடந்த 6 ஆண்டுகளில் தண்டனைக் காலம் முடிவதற்குள் சட்டவிரோதமாக சிறைகளில் இருந்து தப்பிச் சென்ற அல்லது தலைமறைவான கைதிகள் மற்றும் சந்தேகநபர்களின் எண்ணிக்கை 1, 181 ஆக காணப்படுகின்ற நிலையில், அவர்களில் 709 பேர் இதுவரை மீண்டும் கைது செய்யப்படவில்லை.

மேலும், கணக்காய்வு உட்படுத்தப்பட்ட 2025ஆம் ஆண்டிற்குள் நாட்டின் 22 சிறைச்சாலைகளில் இருந்து 5,083 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றுடன், 2,432 கைப்பேசி மின்கலங்கள், 970 சார்ஜர்கள், 4,149 சிம் அட்டைகள் மற்றும் 3,111 பிற உதிரிப் பாகங்களும் குறிப்பிட்ட காலப்பகுதியில் சிறைகளுக்குள்ளிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய சாதனங்கள் கைதிகளின் கைகளுக்குச் செல்வதைத் தடுக்க முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், இவை கைதிகளுக்குக் கிடைப்பதனால் சட்டவிரோதச் செயல்கள் மற்றும் பாதாள உலகச் செயல்பாடுகள் அதிகரித்து, பொதுமக்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கணக்காய்வு அலுவலகம் அவதானித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |