அமெரிக்காவில் பல்கலைக்கழகம் ஒன்றில் சரமாரி துப்பாக்கிசூடு : பலர் காயம்
United States of America
Gun Shooting
By Jaso
அமெரிக்காவின் வர்ஜீனியாபல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ஐவர் காயம் அடைந்துள்ளனர். பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.
சனிக்கிழமை அதிகாலையில் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் குவாட் அனெக்ஸஸ் அருகே இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிசூடு
வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் சந்தேகத்துக்கிடமான நபர்கள் நுழைந்து இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டால் படுகாயம் அடைந்த பலர், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது, சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து, வர்ஜீனியா பல்கலைக்கழகம் உடனடியாக பாதுகாப்பு கருதி மூடப்பட்டு இருக்கிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்