உயர்தரப் பரீட்சை வினாத்தாள் தொடர்பான சர்ச்சை! விசாரணையை தொடங்கிய சிஐடி
ஹம்பாந்தோட்டை - அம்பலாந்தோட்டை பகுதியில் உள்ள உயர்தரப் பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையம் ஒன்றில் அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வினாத்தாள் தொடர்பான ஒரு பிரச்சினை தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
குறித்த விடயத்தை கல்வி பிரதி அமைச்சர் மதுர செனரத்ன தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட மையத்தில் வினாத்தாள் பைகள் பிரிக்கப்பட்டிருந்தாலும், வினாத்தாள்கள் எதுவும் கசிந்துள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் உறுதி செய்யப்படவில்லை என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சைப் பணிகள்
இச்சம்பவம் தொடர்பில் பரீட்சைத் திணைக்களமும் காவல்துறையினரும் ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்தியிருந்தன.

இந்த ஒரு சம்பவத்தைத் தவிர, க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வேறு எந்தச் சம்பவங்களும் பதிவாகவில்லை என்றும், பரீட்சைப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 23 மணி நேரம் முன்