இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி அலை
இந்தோனேசியாவின் கடலோரப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் 1 மீட்டருக்கும் (3 அடி) குறைவான சுனாமி அலைகள் பதிவாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் மூன்று மணி நேரம் கழித்து எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்படுவதற்கு முன்தாக இந்த குறைவளவான தாக்கத்தை இந்தோனேசியா சந்தித்துள்ளது.
இந்நிலையில் குறித்த நிலநடுக்கத்தின் விளைவாக குறைந்தது 47 பேர் உயிரிழந்ததாக இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் தணிப்பு முகமை பிரிவு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7.7 ஆகப் பதிவான நிலநடுக்கம்
ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, புளோரஸ் தீவின் கடற்கரைக்கு அப்பால் 10 கிலோமீட்டர் (6.2 மைல்கள்) ஆழத்தில் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

ஆழம் குறைந்த நிலநடுக்கங்கள் (70 கிலோமீட்டர் ஆழம் வரை) மிகவும் ஆபத்தானதாகவும், பேரழிவை ஏற்படுத்தக்கூடியதாகவும் கருதப்படுகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 4 மணி நேரம் முன்