கேபிள் கார் விபத்து : மற்றுமொரு பௌத்த பிக்கு உயிரிழப்பு
Kurunegala
Sri Lanka
Buddhism
By Sathangani
குருணாகல் மெல்சிறிபுர நா உயன, ஆரண்ய சேனாசனத்தில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் மற்றுமொரு பௌத்த பிக்கு உயிரிழந்துள்ளார்.
கடந்த 24 ஆம் திகதி போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட கேபிள் கார் உடைந்து விழுந்த சம்பவத்தில் 7 பௌத்த பிக்குகள் உயிரிழந்திருந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த ஏனைய பிக்குகள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
8 பேர் உயிரிழப்பு
இந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 41 வயதுடைய மற்றுமொரு பௌத்த பிக்கு இன்று உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கேபிள் கார் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
விபத்து நேர்ந்த சந்தர்ப்பத்தில் குறித்த கேபிள் காரில் 13 பௌத்த பிக்குகள் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
