தையிட்டிக்கு எதிராக வெடிக்கவுள்ள மாபெரும் போராட்டம்: விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!
தையிட்டி விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் குறித்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத விகாரை
இந்தநிலையில், தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக எதிர்வரும் மூன்றாம் திகதி நடத்தப்படவிருக்கின்ற எதிர்ப்பு போராட்டத்திற்கு கட்சிகள், மதத் தலைவர்கள், சிவில் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் கலந்து கொண்டு எதிர்ப்புக்களை பதிவு செய்யுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு சிங்கள மற்றும் இஸ்லாமியர்கள், தமக்கு ஒரு பிரச்சனை வரும்போது தங்களது பிரிவினகளை மறந்து ஒற்றுமையாக ஓன்று சேருந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இருப்பினும், நாம் பல்வேறு வகையில் பிரிந்திருக்கின்றோம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனடிப்படையில், எல்லாவற்றையும் மறந்து நாளை மறுதினம் தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிரான போராட்டத்திற்கு ஓன்று திரண்டு எதிர்ப்பு வெளியிடுமாறு அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening