போராட்டத்திற்கு அணிதிரள்க!! ஆசிரியர்களுக்கு பகிரங்க அழைப்பு
today
protest
teachers association
By Vanan
அடையாள எதிர்ப்புப் போராட்டத்திற்காக அனைத்து ஆசிரியர்களையும் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுத்துள்ளார் கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.ஜெயராஜா.
ஒக்டோபர் - 06 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, இன்று கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தொடர் ஏற்பாடாக, அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை முன்நிறுத்தி திருக்கோணமலை கல்வியமைச்சின் முன்பாக காலை 9.30 மணிக்கு எதிர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதில் பங்குபெறுபவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.