அரச சார்புநிலைப்பாட்டுக்கு மடை மாற்றப்படும் ஈழத்தமிழர்கள்! தேசமாக திரள சரியான தருணம்?

Sri Lankan Tamils Sri Lankan Peoples Sonnalum Kuttram
By Dhilak Feb 02, 2026 12:06 AM GMT
Report

ஒரு தேசமாக திரளுமாறு பொது அமைப்புகளின் ஒன்றியத்தினால் தமிழ்ச்சமூகத்திற்கான பொது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

கிபுல் ஓயாத்திட்டம் என்ற பெயரில் வடக்கில் ஒரு பெரும் சிங்களக்குடியேற்றத்தைக்காவிவர கடந்த கால இனவாத செயற்பாட்டாளர்களின் வரிசையில் தற்போதைய அநுர அரசும் மல்லுக்கட்டிக்கொண்டு நிற்கும் நிலையில் ஈழத்தமிழர்களின் இனப்பரம்பலில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டமிட்ட இச்சதி நடவடிக்கைக்கு எதிராக நாளை வவுனியாவின் நெடுங்கேணியில் பாரிய போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 16 ஆண்டுகளில் ஈழத்தமிழினம் சுக்கு நூறாக சிதைக்கப்பட்டு ஒரு பிரித்தாளும் தந்திரத்திற்குள் அகப்பட்டு தன் தலையில் தன் கைகளாலையே மண் அள்ளிப்போட்டுக்கொண்ட இந்த பேரவலத்தில் இருந்து. மீண்டு வர இதுவே ஒரு சரியான தருணம்.

ஒரு இனமாக ஈழத்தமிழர்கள் மீள் கட்டமைக்கபடவேண்டும் பெருங்கனவை சுமக்கவேண்டும், இத்தனைகால தியாகங்களுக்கு ஒரு பெறுமதி சேர்க்கப்பட வேண்டும் இப்படி அத்தனையும் வெறுங்கனவுகளாக மாறிப்போய்விடக்கூடாது என்பதே இந்த இனத்தை நேசிக்கும் ஒவ்வொருவரின் இப்போதைய பேரவாவாக இருக்கிறது. 

ஏன் ஈழத்தமிழர்கள் இப்போது ஒரு தேசமாக திரளவேண்டும் ? அதற்கான காலக்கட்டாயம் என்ன இந்தக்கேள்விகளுக்கு தாயகத்தில் நமது நாளாந்தம் எதிர்கொள்ளும் ஆக்கிரமிப்புகளும் அத்துமீறல்களுமே போதுமானது.

இந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகளாக நாளுக்கு நாள் நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த இனம் மற்றுமொரு பக்கமாக அரச சார்புநிலைப்பாட்டுக்கு மடைமாற்றப்படும் அவலமும் நிகழ்தேறிக்கொண்டிருக்கிறது. 

வடக்கு கிழக்கில் இடம்பெறும் சிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்துபவர்களாக அவர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். 

நேற்று தமிழர் தேசத்தலைநகரில் பொதுவிளையாட்டு மைதானத்தில் பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்து திருப்திப்பட்டு நிற்கும் பேரினவாதம் மிகமோசமான ஆக்கிரமிப்பையும் இனச்சிதைப்பிற்கும் அடித்தளமிட மீண்டும் கிபுல் ஓயாவை கையிலேந்தியிருக்கிறது. 

ஓடாத மானும் போராடாத இனமும் மீள்வது சாத்தியமில்லை என்பார்கள் இந்த இனம் ஈழ நிலப்பரப்பில் நிலைத்திருக்கவேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் ஒரு தீர்க்கமான காலகட்டத்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறோம். 

இப்போது ஒரு தேசமாக நம்மால் திரளமுடியவில்லை என்றால் அது எப்போதும் சாத்தியமில்லாத ஒன்றாக மாறிப்போகலாம் என்ற கவலையும் வெளியிடப்பட்டுள்ளது. 

மொறிசியஸில் தமிழ் தெரியாத தமிழர்களைப்போல கதிர்காமத்தில் ,அநுராதபுரத்தில் வாழும் தமிழ்த்தெரியாத தமிழர்களைப்போல வடக்கிலும் உங்கள் சந்ததிகளை தொலைக்கப்போகிறீர்களா? 

உயிரிலும் மேலானது நிலம் என்று இந்த நிலத்திற்காக விதையாகிப்போனோரின் தியாகத்தின் விலையை வீணாக்கப்போகிறோமா? 

இப்போது நமது நிலத்திற்காக போராடாமல் போனால் எப்போது போராடப்போகிறோம்?போன்ற கேள்விகள் சமூகப்போராளிகளால் தொடர்ந்தும் முன்வைக்கப்படும் நிலையில் நம் நிலத்திற்காக நம் சந்ததிகளுக்காக ஒன்றாகி ஒரு எதிர்ப்பை பதிவு செய்வதே இப்போதைக்கு நம்மாலானது எனவும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020