நாமலின் மனைவிக்கு ஆதரவாக தீவிர பிரசார நடவடிக்கை!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவியான லிமினி ராஜபக்சவுக்காக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பல்வேறு பிரசாரம் குழுக்களால் தீவிர பிரசார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவரை பெண் சிங்கம் எனப் பெயரிட்டு முன்னிலைப்படுத்துவதால் அக்கட்சிக்குள் பல சலசலப்புகள் மற்றும் மோதல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனடிப்படையில், பொதுஜன பெரமுன கட்சியின் அதிகாரமானது ராஜபக்ச குடும்பத்தின் இரத்த உறவுகளிடமிருந்து அகற்றப்படும் நிலைமை உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தீவிர அரசியல்
தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள சமல் ராஜபக்சவின் இரண்டு புதல்வர்கள், மகிந்த ராஜபக்சவின் மூன்று புதல்வர்கள், கோட்டாபய ராஜபக்சவின் புதல்வர் மற்றும் பசில் ராஜபக்சவின் மூன்று புதல்விகள் ஆகிய அத்தலைமுறையின் ஒன்பதாம் நிலை வாரிசுகள் உள்ளனர்.
அவர்களை ஒதுக்கிவிட்டு லிமினி ராஜபக்சவை முன்னிலைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் அவரை தொடர்புபடுத்திய பிரசாரங்கள் தினமும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.
சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோருடன் அவரை ஒப்பிட்டு வரலாறு மீண்டும் திரும்புகிறதா என மொட்டுக் கட்சியின் பிரதான உத்தியோகபூர்வ முகப்புத்தகங்களின் பக்கங்களில் பதிவிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |