இயற்கை ஆரோக்கிய உணவை ஊக்குவிக்கும் பரப்புரை சாவகச்சேரியில்
World Vision உலகத்தரிசன நிறுவனத்தின் பரப்புரையான ENOUGH நாடளாவியரீதியில் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்முக்கிய குறிக்கோள் சிறுவர்களின் பசியினையும் ஊட்டச்சத்துக்குறைபாட்டையும் முடிவுக்கு கொண்டுவருவதாகும்.
யாழ் . மாவட்ட பரப்புரை உலகத்தரிசன சாவகச்சேரி அபிவிருத்தித் திட்டத்தின் ஒருங்கிணைப்பில் ஆடி 11 ம் திகதி காலை 8.30 மணிக்கு சாவகச்சேரி கலாச்சார மண்டபத்தில் பாடசாலை மாணவர்கள் கல்வித் திணைக்களம் சுகாதாரத் திணைக்களம் பிரதேச செயலகம் மற்றும் உள்ளூராட்சித் அமைப்புக்களின் பங்களிப்போடு உலகத்தரிசன அமைப்பின் தேசிய பணிப்பாளர் கலாநிதி தனன் சேனாதிராஜா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் இயறகை ஆரோக்கிய உணவுகளை மட்டும் பயன்படுத்துவதை ஊக்குவிக்க இயற்கை ஆரோக்கிய உணவுகளின் அணிவகுப்பும் விழிப்புணர்வு நாடகமும் அரங்கேற்றப்பட்டது.




