விடுதலைப் புலிகளையும் ஹமாசையும் ஒப்பிடுவது சரியா?
மே மாதம் என்பது உலகத் தமிழர்களைப் பொறுத்தவரை வலிசுமந்த ஒரு மாதம்.
எமது உறவுகளை, நாம் வாழவேண்டும் என்பதற்காக தங்களையே ஆகுதியாக்கிக்கொண்ட அந்தத் தியாகச் செம்மல்களை, தமிழருக்கு அடையாளம் தந்த அந்த ஒப்பற்ற தலைவனை கண்முன்னே பறிகொடுத்துவிட்டு தமிழ் இனமே ஒன்றுகூடி ஓவென்று கதறி அழுத மாதம்.
இன்றைக்கு காசாவை- குறிப்பாக ரப்பாவையும் அங்கு பரிதவிக்கும் பலஸ்தீனர்களைப் பார்க்கின்றபோது, 2009ம் ஆண்டு தமிழர்கள் சந்தித்த அந்த வலிசுமந்த மே மாதத்தின் கொடூரமான காட்சிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
ஈழத்தின் முள்ளிவாய்க்காலில் 2009ம் ஆண்டு மே மாதம் நாம் பார்த்த பல காட்சிகளையும், 15 வருடங்களின் பின்னர் அதே மே மாதத்தில் காசாவில் நடைபெறுகின்ற சில காட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி.
அத்தோடு, முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளையும், காசாவில் பலஸ்தீன மக்களுக்காகப் போராடுவதாகக் கூறப்படுகின்ற ஹமாசையும் ஒப்பிட்டும் ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |