ரஸ்ய பிரஜைகளுக்கு தடை விதித்துள்ள கனேடிய அரசாங்கம்
Canada
World
Russia
By Laksi
ரஸ்ய ( Russia) பிரஜைகள் 13 பேர் மீது கனேடிய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இந்த தடையானது கனேடிய புலனாய்வுப் பிரிவு, சிறைச்சாலைகள் மற்றும் காவல்துறை பிரிவு என்பனவற்றைச் சேர்ந்த 13 ரஸ்யப் பிரஜைகள் மீது விதிக்கப்பட்டுள்ளது.
கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி (Melanie Jolie) தடை குறித்து அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.
ரஸ்ய பிரஜைகள் மீது தடை
குறிப்பாக ரஸ்யாவின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி (Alexei Navalny) கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை மற்றும் நஞ்சூட்டப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அலெக்ஸியின் மனைவி ஜூலியா தற்பொழுது கனடாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் கனேடிய அரசாங்கம் ரஸ்ய பிரஜைகள் சிலருக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்