கனேடிய மக்களுக்கு வெளியான எச்சரிக்கை: அதிகரிக்கும் பனிப்புயல்
Canada
Weather
World
By Dilakshan
கனேடிய மக்களுக்கு பனிப்புயல் தொடர்பில் சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், இன்றைய தினம்(13) ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் ஒரு சில இடங்களில் பனிப்புயல் நிலைமை அதிகரிக்கவுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
அதன்போது, சில இடங்களில் 25 சென்றிமீற்றர் அளவில் பனிப்பொழிவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை
மேலும், கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன சாரதிகளினால் வாகனங்களை செலுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடுமென கூறப்படுகிறது.
அத்தோடு, பனிப்புயல் வீசும் வேளைகளில் பயணங்களை வரையறுத்துக் கொள்வது அவசியமென மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, கடுமையான குளிருடன் மழை பெய்யும் சாத்தியமும் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 3 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி