இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவ முன்வந்தது கனேடிய வர்த்தக சமுகம்
இலங்கையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை வெற்றிகொள்ளும் வகையில் ஒத்துழைப்பு வழங்க கனேடிய வர்த்தக சமுகத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள கனேடிய வர்த்தகத் தலைவர்கள் குழு நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று (03) நாடாளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே இந்த இணக்கப்பாட்டைத் தெரிவித்தனர்.
இலங்கையிலுள்ள இளம் தொழில்முனைவோர்
இலங்கையுடனான நட்புறவை மேம்படுத்துவதற்குத் தாம் எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்த இக்குழுவினர், இலங்கையிலுள்ள இளம் தொழில்முனைவோர் தத்தமது நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதற்கான ஆதரவை வழங்க விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன், வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கான ஒருங்கிணைப்பு செயலகமொன்று இலங்கையில் ஸ்தாபிக்கப்படவிருப்பதாகவும், இதற்கான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் வருகை தந்திருந்த கனேடிய வர்த்தக சமுகத்தினரிடம் சபாநாயகர் தெரிவித்தார்.
பொருளாதார அபிவிருத்தி
இதன் ஊடாக பொருளாதார அபிவிருத்திக்கு சம்பந்தப்பட்ட துறையினரின்
ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.