கனடாவில் இந்திய துணை தூதரகத்திற்கு விடுக்கப்பட்ட பயங்கரவாத எச்சரிக்கை
கனடாவிலுள்ள (Canada) இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிடவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையை அமெரிக்காவை தளமாக கொண்ட காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில் நாளை (18) 12 மணிநேரம் துணை தூதரகத்தை முற்றுகையிடவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
பயங்கரவாதிகள்
இது தொடர்பில் குறித்த அமைப்பினால் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2023 ஆம் ஆண்டு ஹர்தீப்சிங் நிஜார் படுகொலையில் இந்தியர்களின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்படுவதாக கனடா பிரதமர் ட்ரூடோ பார்லியில் அறிவித்தார்.
இரண்டு ஆண்டுகள்
இரண்டு ஆண்டுகள் கடந்தும் காலிஸ்தான் இயக்கத்தினரை குறி வைத்து உளவு அமைப்புகள் செயல்படுகின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) காலப்பகுதியில், காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டு வந்தார்.
இதனால் இந்தியா மற்றும் கனடா உறவு சீர்கெட்டதுடன் ஜஸ்டின் பதவி விலகி புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், மீண்டும் காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பிரச்சினை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
