ட்ரம்பின் கோல்டன் டோம் திட்டத்தில் கனடா : பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட தகவல்
அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள 175 பில்லியன் டொலர் மதிப்பிலான 'கோல்டன் டோம்' ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தில், கனடாவும் முதலீடு செய்யும் வாய்ப்பு உள்ளது என கனேடிய (Canada) பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார்.
கோல்டன் டோம் என்பது தரை மற்றும் விண்வெளி அடிப்படையிலான ஏவுகணை கேடய அமைப்பாகும், இது ஏவுகணைகளை பல கட்டங்களில் கண்டறிந்து, கண்காணித்து நிறுத்தவும் புறப்படுவதற்கு முன் அவற்றை அழிக்க அல்லது நடுவானில் இடைமறிக்கும் திறனை கொண்டது.
இந்த புதிய அமைப்பு அமெரிக்காவின் வெற்றிக்கும் உயிர்வாழ்விற்கும் மிகவும் முக்கியமானது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
கோல்டன் டோம் திட்டம்
இந்நிலையில், ட்ரம்ப்பின் 'கோல்டன் டோம்' திட்டத்தில் கனடாவும் முதலீடு செய்யும் வாய்ப்பு உள்ளது என கனேடிய பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கனடா மற்றும் கனேடியர்களின் பாதுகாப்பு தேவைகளுக்கும் இந்த திட்டத்தில் இணைவது என்பது நல்ல யோசனைதான்.
Golden Dome என்பது இஸ்ரேலின் Iron Dome திட்டத்தினைப் போல உருவாக்கப்படும் ஒரு பாரிய வான்வழி பாதுகாப்பு அமைப்பு ஆகும்.
ஆயுதம் தாங்கிய ஏவுகணை
ஆனால் இது குறுகிய தூரத்தில் மட்டும் செயல்படும் Iron Dome-ஐ விட மிகவும் மேம்பட்டதாக இருக்கும்.
இது, hypersonic, space-based மற்றும் அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகள் உள்ளிட்ட பலவகை தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.
நாம் விரும்பினால், அமெரிக்காவின் Golden Dome திட்டத்தில் முதலீடு செய்து பங்கேற்க முடியும். இது குறித்த உயர் நிலை பேச்சுவார்த்தையில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ட்ரம்புடன் சில முறை இந்த திட்டம் குறித்து பேசியுள்ளேன் என கனேடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
