அவசர அவசரமாக இராணுவ பலத்தை அதிகரிக்கும் கனடா
கனடாவின் லிபரல் அரசாங்கம் தனது ஆயுதப் படைகளுக்கு கூடுதல் பில்லியன்களை முதலீடு செய்து, இந்த நிதியாண்டில் நேட்டோவின் 2% இராணுவச் செலவின இலக்கை அடையும் என்று பிரதமர் மார்க் கார்னி(Mark Carney) தெரிவித்துள்ளார்.
கனடா தனது இராணுவத்திற்கான நிதியை அதிகரிக்க அமெரிக்கா மற்றும் பிற நேட்டோ நட்பு நாடுகளிடமிருந்து பல ஆண்டுகளாக கடுமையான அழுத்தத்தை அனுபவித்து வருகிறது.
கனடா தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1.4% பாதுகாப்பிற்காக செலவிடுகிறது.
புதிய ஆயுதங்கள்
இந்த நிலையில், தற்போது பலம் மற்றும் உறுதியுடன் விரைவாக செயற்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கனேடிய பிரதமர் கார்னி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, முந்தைய லிபரல் அரசாங்கம் 2032 ஆம் ஆண்டுக்குள் நேட்டோ இலக்கை அடைவதாக உறுதியளித்திருந்தது.
அதன்படி, கனடா ஆயுதப் படைகளுக்கான ஊதியத்தை அதிகரிக்கும் எனவும் புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள், கப்பல்கள், ஆயுத வாகனங்கள் மற்றும் பீரங்கிகள், கடல் தளத்தையும் ஆர்க்டிக்கையும் கண்காணிக்க புதிய ரேடார், ட்ரோன்கள் மற்றும் சென்சார்களை வாங்கும் என்றும் கார்னி கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        