ஹரி ஆனந்தசங்கரியின் கடமை தொடர்பில் வழங்கப்பட்ட புதிய தீர்ப்பு
கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியின் (Gary Anandasangaree) கடமை தொடர்பில் அந்நாட்டின் நெறிமுறை ஆணையாளர் புதிய தீர்ப்பை வழங்கியுள்ளார்.
அதன்படி, கரி ஆனந்தசங்கரியின் மனைவி கனேடிய சிவில் லிபர்ட்டிஸ் அசோசியேசன் என்ற அமைப்பின் பணிப்பாளராக இருந்தாலும், அதற்கும், அவரது கணவரான கரி ஆனந்தசங்கரியின் தேசிய பாதுகாப்பு கடமைகளுக்கும், எந்த நலன் முரண்பாடும் இல்லை என அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரியினால், வலுவான எல்லைச் சட்டம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆனந்தசங்கரியின் கோரிக்கை
இந்தநிலையில், அவர், தமது கடமைகளை நிறைவேற்றும்போது, நலன் மோதல் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இதனையடுத்து ஆனந்தசங்கரியின் கோரிக்கையின்படி, கனடாவின் நெறிமுறை ஆணையாளர் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, அவருடைய மனைவியின் சேவைக்கும், அமைச்சின் கடமைகளுக்கும் எவ்வித நலன் முரண்பாடுகளும் இல்லையென்று அவர் தீர்ப்பளித்துள்ளார்.
இதேவேளை ஹரி ஆனந்தசங்கரியின் தமிழ் சமூகத்துடனான தொடர்புகள் தொடர்பிலும், நலன் மோதலை நிவர்த்தி செய்ய ஒரு முறையான திரையிடல் தேவையில்லை என்றும் கனடாவின் நெறிமுறை ஆணையாளர் வான் ஃபிங்கன்ஸ்டீனும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
