வெளிநாட்டில் சுற்றி திரியும் இனிய பாரதியின் நெருங்கிய சகாக்கள்: பட்டியலிடும் முக்கிய சாட்சி
இனிய பாரதியுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மேலும் பலர் வெளிநாடுகளில் சுதந்திரமாக நடமாடுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு (Chandrakanthan Chandra Nehru) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஐபிசி தமிழின் அக்கினி பார்வை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இனிய பாரதியுடன் இணைந்து பயணித்து விட்டு வெளிநாடுகளுக்கு சென்று, தாங்கள் பயத்தில் இனிய பாரதியுடன் இணைந்து பயணித்ததாக தெரிவித்து விட்டு சிலர் இலகுவாக கடந்து செல்கின்றனர்.
இதில் மிகவும் முக்கியமான நபர்கள் வெளிநாட்டுக்கு ஓடியுள்ளதுடன் சிலர் இன்னும் புறப்பட தயாராகி வருகின்றனர் ஆனால் சிலர் தங்களை நல்லவர்களாக காட்டி பயணிக்கின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து சாட்சி தெரிவித்தால் மாத்திரமே நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் அரசியல் தலைமைகளின் முக்கிய கைதுகள், இனிய பாரதியின் முக்கிய மற்றும் மறைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள், மக்களுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்கள் மற்றும் பாதிக்கப்பட்ட முக்கிய சாட்சிகள் குறித்து அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய அக்கினி பார்வை நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
